திருத்தணி: திறந்த முதல் நாளே பெயர்ந்து வந்த தரை... அரசுப் பள்ளியின் அவல நிலை!

திருத்தணி அருகே பள்ளி கட்டடம் திறந்த முதல் நாளே தரை உடைந்து கற்கள் பெயர்ந்து வந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
School building
School buildingpt desk

திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டடம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து, திருவாலங்காடு வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.

Govt school
Govt schoolpt desk

அப்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே சென்றதும் தரை உடைந்து கற்கள் பெயர்ந்தன. பள்ளிக் கட்டடம் தரமாக இல்லை என கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், அதிகாரிகள் பள்ளியை உரிய முறையில் ஆய்வு செய்யாமலேயே தரமாக உள்ளதாக சான்றளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com