காற்றாலை மின் உற்பத்தியில் புதிய உச்சம்.. 5,935 மெகாவாட்டைத் தாண்டிய மின் உற்பத்தி!
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்ததால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் 5,935 மெகாவாட் மின் உற்பத்தி பதிவு செய்யப்பட்டு, இந்த சீசனின் அதிகபட்ச உச்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஐயாயிரத்து 935 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, இந்த சீசனின் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பருவக்காற்று காரணமாக, காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

