Wildlife at Risk as CDV Virus Spreads From Street Dogs
தெருநாய்கள்Pt web

5 புலிகள் உயிரிழப்பு.. நாய்களால் பரவும் சிடிவி வைரஸ்.. தடுப்பு பணிகளில் வனத்துறை!

தெருநாய்களில் காணப்படும் கெனைன் டிஸ்டெம்பர் (சி.டி.வி) வைரஸ், வன விலங்குகளுக்கு பரவி வருவதால், வனத்துறை அவசர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Published on

நாய்களிடமிருந்து வன விலங்குகளுக்கு பரவும் சி.டி.வி வைரஸை தடுக்க, வனத்துறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தெருநாய்களுக்கு ஏற்படும் சி.டி.வி எனப்படும் கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் பாதிப்பு, வன விலங்குகளுக்கு எளிதில் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில், மத்திய பிரதேசத்தில் ஐந்து புலிகள், இந்த சி.டி.வி வைரஸால் உயிரிழந்துள்ளன.

புலிகள் உயிரிழப்பு
புலிகள் உயிரிழப்புPt web

இதனையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரிகள், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வனப்பகுதியையொட்டி தெருநாய்கள் அதிகரித்திருப்பதாகவும், எனவே வன விலங்குகளுக்கு சிடிவி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, வைரஸ் பரவலை தடுக்க தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, அவற்றுக்கு தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Wildlife at Risk as CDV Virus Spreads From Street Dogs
எடைக் குறைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் மூளையில் மாற்றமா? விவரம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com