GLP drugs
GLP drugs web

எடைக் குறைப்பு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் மூளையில் மாற்றமா? விவரம்!

எடை குறைப்பு மருந்துகள் மூளையில் நேரடி தாக்கத்தால் இன்பம், போதை உணர்வுகளிலும் மாற்றம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது .
Published on
Summary

GLP-1 வகையைச் சேர்ந்த புதிய எடை குறைப்பு மருந்துகள், மூளையின் ஆழத்தில் அமைந்துள்ள மகிழ்ச்சி மற்றும் வெகுமதி உணர்வுகளை அடக்குவதாகக் கண்டறிந்துள்ளது.

தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு உடல் எடையைக் குறைக்கும் புதிய வகை வாய்வழி மருந்துகள் வெறும் பசியை மட்டும் கட்டுப்படுத்தாமல், மூளையின் மகிழ்ச்சி மற்றும் வெகுமதி உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், ஜிஎல்பி-1 (GLP-1) ரக மருந்துகள் மூளையின் 'டோபமைன்' (Dopamine) சுரப்பை மாற்றியமைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடை குறைப்பு
உடல் எடை குறைப்புFacebook

இது வெறும் பசியைக் குறைப்பது மட்டுமல்லாமல், அதிக கலோரி கொண்ட உணவுகள் மீதான ஆசையையும் குறைக்கிறது. எனினும், இது போதைப் பழக்கம் மற்றும் இன்பத்தை உணரும் தன்மையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இம்மாத்திரைகளைத் தீவிரக் கண்காணிப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

GLP drugs
ஹெல்த் டிப்ஸ்| எப்படி சிறுநீர் கழித்தால் ஆண்களுக்கு நல்லது..? மருத்துவர்கள் ஆலோசனை.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com