நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன்? யாரை காப்பாற்ற - எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி
செய்தியாளர்: ஸ்டாலின்
தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லி சென்றேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கான நிதி'க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி'-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்காண உண்மை பதில் என்ன என சொல்ல முடியுமா?. ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்க்கு பில்டப் செய்கிறீர்களே?
உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள 'நிதி'களையும், அவர்களுக்கு துணையான 'தம்பி'களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்காண தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் வீட்டுத் 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்?
இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் பேச தயாரா?. இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல் தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.