\
 vijay, Jagadeesh Awasthi
vijay, Jagadeesh AwasthiVijay Hair Stylist

முதல்வருடன் விமானத்தில்... யார் இந்த ஜெகதீஷ் அவஸ்தி? விஐய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

முதல்வர் விஜயின் இந்த டெல்லி பயணத்தின்போது அவருடன் ஜெகதீஷ் அவஸ்தி என்பவரும் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Published on
Summary

தமிழக முதல்வர் விஜய், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பயணத்தில், அவருடன் சென்ற ஜெகதீஷ் அவஸ்தி யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழக முதல்வர் விஜய் தனது முதல் டெல்லி பயணத்தை மேற்கொண்டு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜயின் இந்த டெல்லி பயணத்தின்போது அவருடன் அவரின் தனிப்பட்ட ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, உதவியாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. அதில் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜெகதீஷ் அவஸ்தி என்பவரும் முதல்வர் விஜயுடன் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் யார் என்பது குறித்த விவாதம் சமூகவலைத்தளத்தில் எழுந்துள்ளது. படிப்பை முடித்த ஜெகதீஷ் அவஸ்தி பல்வேறு சலூன்களில் வேலை பார்த்து, முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டுகளிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களின் அறிமுகம் அவருக்கு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மூலம் விஜய்க்கும் இவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. முதல் முறையாக பிகில் திரைப்படத்தில் இவர் விஜய்க்கு சிகை அலங்காரம் செய்த நிலையில், அப்போதில் இருந்து 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'வாரிசு', 'லியோ', 'தி கோட்' மற்றும் இன்னும் வெளியாகாத 'ஜன நாயகன்' உள்ளிட்ட விஜய்யின் அனைத்து திரைப்படங்களிலும் இவரே விஜயின் பிரத்யேக ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

சினிமாவை தாண்டி விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் விஜயின் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இவரே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இருந்து அவர் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சி வரை விஜய்க்கு இவரே சிகை அலங்காரமும் செய்துள்ளார். அந்த வகையில் டெல்லி சென்ற முதல்வருடன் ஜெகதீஷ் அவஸ்தியும் சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் விஜயை தாண்டி அல்லு அர்ஜுன், விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ஸ்ரத்தா கபூர் என சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளுக்கும் இவர் ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றி வருகிறாராம்.

 vijay, Jagadeesh Awasthi
மீண்டும் தொடங்கிய ஈரான் போர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா! அழிந்துபோன அதிநவீன ட்ரோன்கள்.!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com