\
அழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் ?

அழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் ?

அழுகிய நிலையில் ஆண் சிசு: பெற்றோர் யார் ?
Published on

நீரோடையில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சிசுவை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே குளத்துப்பாலம் பகுதியில் உள்ள நீரோடையில் அழுகிய நிலையில் மிதந்த சிசுவை பொதுமக்கள் தந்த தகவலின் அடிப்படையில் கேரள குமுளி காவல்துறையினர் மீட்டனர். தொப்புள் கொடி கூட காயாத நிலையில் கிடந்த சிசுவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பாலினம் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து சிசுவின் உடலை கைப்பற்றி கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் ஆண் சிசு என தெரிய வந்துள்ளது. அதோடு, தாயின் வயிற்றிலேயே இறந்து பின் பிறந்ததாகவும் மருத்துவர்கள் சான்றளித்துள்ளனர். இறந்து பிறந்த சிசுவின் உடல் நீரோடையில் வீசியது யார்? என்ன காரணம்? முறையற்ற உறவுகளால் பிறந்ததா? பெற்றோர் யார்? என்பது போன்ற கேள்விகளுடன் கேரள குமுளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com