“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” - புத்தகத்தை பெற்றுக்கொண்ட ஆனந்த் டெல்டும்டே
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” - புத்தகத்தை பெற்றுக்கொண்ட ஆனந்த் டெல்டும்டேபுதிய தலைமுறை

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” - புத்தகத்தை பெற்றுக்கொண்ட ஆனந்த் டெல்டும்டே! யார் இவர்?

’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு உடன், ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டார். யார் இந்த ஆனந்த் டெல்டும்டே? இந்த தொகுப்பில் பார்க்கலாம்,.
Published on

ஆனந்த் டெல்டும்டே.. அறிஞர், எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர் என பன்முகங்களைக் கொண்டவர். விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட, நூலை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே. சந்துரு உடன், சமூகச் செயற்பாட்டாளரான ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டார்.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா
அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாபுதிய தலைமுறை

யார் இந்த ஆனந்த் டெல்டும்டே?

மகாராஷ்டிராவில் யவத்மால் மாவட்டத்தில் உள்ள ராஜூர் எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பத்தில், 1951 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தவர் ஆனந்த் டெல்டும்டே. உடன்பிறந்தவர்கள் 8 பேர் குடும்பத்தில் மூத்த குழந்தை. எத்தகைய சூழலிலும் படிப்பை மட்டும் ஆனந்த் டெல்டும்டே கைவிடவில்லை. 1973ல் விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

1982ல் அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். பாரத் பெட்ரோலியத்தில் பணிபுரியும்போது மும்பை பல்கலைக்கழகத்தில் cybernetic மாடலிங்கில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு கர்நாடக மாநில திறந்த நிலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளது. ஆனந்த் டெல்டும்டே டாக்டர் அம்பேத்கரின் பேத்தியான ரமாவை மணந்து கொண்டார்.

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” - புத்தகத்தை பெற்றுக்கொண்ட ஆனந்த் டெல்டும்டே
🔴 LIVE | தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியிட்டு விழா!

தலித் மக்களது விடுதலை குறித்தும், அம்பேத்கரிய ஆய்வுகள் குறித்தும் பல்வேறு முன்னணி இதழ்களில் எழுதியுள்ள டெல்டும்டே, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களது விடுதலைக்காக போராடுவதில் மார்க்சிய மற்றும் அம்பேத்கரிய இயக்கங்களுக்கு இடையே நெருக்கமான உறவு அவசியம் என வலியுறுத்துபவர் ஆனந்த் டெல்டும்டே.

அதிகமான அம்பேத்கரிய புத்தகங்களை எழுதியுள்ளார். உதாரணத்திற்கு, அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள், அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும், ஒன்றிய அரசும் கூட்டாட்சித் தத்துவமும், தலித்கள் நேற்று இன்று நாளை என பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

கடந்த 2017 டிசம்பர் 31 ஆம் தேதி நடந்த எல்கான் பரிஷத் விழாவில் ஆனந்த் டெல்டும்டே கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர்களது கருத்துகள்தான் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நடந்த பீமா கோரேகான் வன்முறைக்கு வித்திட்டதாக பூனே போலீஸ் தெரிவித்தது. இந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இரு ஆண்டுகள் காவலில் இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஆனந்த் டெல்டும்டேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com