Naam Tamilar Party
Naam Tamilar Party, SeemanNaam Tamilar Party

கட்சி அங்கீகாரத்தை இழக்குமா NTK..? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன..? விவரம்!

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி குறைவான வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படுமா? இல்லையா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Published on
Summary

2016 முதல் தனித்துப் போட்டியிட்டு வந்த நாம் தமிழர் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்கு பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் இப்போது சட்டமன்றத் தேர்தலில் 4% மட்டுமே கிடைத்ததால், அங்கீகாரம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதே போல அந்த கட்சியின் வாக்கு சதவீதமும் 4 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருந்து நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் களம்கண்டு வரும் நிலையில், அப்போதில் இருந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது. 2016-ல் 1.1 சதவீத வாக்குகளை பெற்ற அக்கட்சி, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீதம் வாக்குகளை பெற்றது.

தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளும், 2021 சட்டமன்ற தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீதம் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, அந்த தேர்தலில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது.

Naam Tamilar Party
தவெகவுக்கு விசிக ஆதரவு.? துணை முதல்வராகும் திருமா.? அதிரடி திருப்பம்!

இந்தியாவில் ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 இடங்களை வெல்ல வேண்டும். அல்லது சட்டப்பேரவை அல்லது மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 8 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அக்கட்சி கோரிய கலப்பை ஏந்திய விவசாயி சின்னம் வழங்கப்பட்டது.

Naam Tamilar Party
”தலைவர் முடிவை ஏற்றுக் கொள்வோம்” - திமுக, அதிமுக கூட்டணி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன்!

ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்துக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அதே நேரம் இந்த சட்டமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறத் தவறினாலும், ஒரு கட்சி தனது அங்கீகாரத்த நிரூபிக்க தேர்தல் ஆணையம் மற்றொரு வாய்ப்பையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்
சீமான்எக்ஸ் தளம்

அந்த வகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நாம் தமிழர் கட்சியின் மாநில அங்கீகாரத்துக்கு எந்த சிக்கலும் இல்லை. அதே நேரம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளையோ அல்லது 6% வாக்குகளுடன், 1 மக்களவை இடத்தை கைப்பற்ற தவறினால் நாம் தமிழர் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Naam Tamilar Party
வைரலாகும் 1994 எஸ்.ஆர்.பொம்மை வழக்கு.. 9 நீதிபதிகள் ஒன்றாக சொன்ன தீர்ப்பு என்ன.?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com