தவெகவுக்கு விசிக ஆதரவு.? துணை முதல்வராகும் திருமா.? அதிரடி திருப்பம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை எட்டாத தவெக, ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆதரவை நாடுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு உறுதி; விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி, விஜய் ராஜினாமா செய்யும் தொகுதி ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் முன்வந்ததாக தகவல் பரவி அரசியல் சூடு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிபெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆட்சியமைக்க இன்னும் கூடுதலாக 6 இடங்கள் தேவையாக இருக்கும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவருகிறது. திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி தலா 2 இடங்களை பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளும் இன்று முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. தொடர்ந்து, சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அக்கூட்டம் நிறைவடைந்த பிறகு, முடிவுகளை அக்கட்சி அறிவிக்கவிருக்கிறது.
இந்த சூழலில்தான், விசிக தலைவர் திருமாவளவனுடனான பேச்சுவார்த்தையில், அக்கட்சி திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்பதாகவும், அதேசமயம், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை இந்தத் தேர்தலில் தொடங்கிவைத்த தமிழக வெற்றிக் கழகம், துணை முதல்வர் பதவியை ஒதுக்க முன்வருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

