’மதுரைக்கு மெட்ரோ ரயில் எப்போது?’- பயனாளிக்கு மெட்ரோ நிர்வாகம் அளித்த பதில் என்ன தெரியுமா?

’மதுரைக்கு மெட்ரோ ரயில் எப்போது?’- பயனாளிக்கு மெட்ரோ நிர்வாகம் அளித்த பதில் என்ன தெரியுமா?
’மதுரைக்கு மெட்ரோ ரயில் எப்போது?’- பயனாளிக்கு மெட்ரோ நிர்வாகம் அளித்த பதில் என்ன தெரியுமா?

மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை எப்போது வரும் என பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு மெட்ரோ நிர்வாகம் ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

சென்னையைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது,

இதனை தெலங்கானாவைச் சேர்ந்த பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் பிரைவேட் கம்பெனி இந்த பணியை மேற்கொள்ள 51.62 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டது,

இந்த நிலையில் இந்த ஆய்வு பணியானது ஜனவரி மாதம் துவங்கி கடந்த 5 மாத காலமாக நடைபெற்ற நிலையில், மே மாத இறுதி அதற்கான பணிகள் நிறைவடைந்து ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதா இல்லையா என்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனை மதுரை மக்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து டிவிட்டர் பயனாளி ஒருவர் மதுரை மக்கள் மெட்ரோ சாத்தியக்கூறு அறிக்கையின் நிலையை அறிய விரும்புவதாக தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டிவிட்டரில் பதிலளித்துள்ளது. அதில், மதுரையில் மெட்ரோவுக்கு பொருத்தமான போக்குவரத்து முறையை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்காக பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் சமீபத்தில், வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் அறிக்கை இறுதி செய்யப்பட்டதும், அது சார்ந்த துறைகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் கேட்ட கேள்விக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com