\
தமிழகத்தின் வானிலை நிலவரம்
தமிழகத்தின் வானிலை நிலவரம்Pt web

அடுத்த 2 நாளுக்கு வானிலை எப்படி இருக்கும்..? மீனவர்கள் மீன்பிடிக்க போகவேண்டாம் என அறிவுறுத்தல்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையும், மேகமூட்டமும் காணப்படும் எனவும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க போகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். சில மாவட்டங்களில் அதிகாலை பனிமூட்டம் காணப்படும். தென்தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் 3 வரை மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் 3ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸை ஒட்டிஇருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும்குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குசெல்ல வேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம்
அதிமுகவில் மீண்டும் சேர ரெடியான ஓபிஎஸ்.. ஒரேயடியாய் முடிச்சுவிட்ட இபிஎஸ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com