விக்கிரவாண்டியில் ஓய்ந்தது பரப்புரை... கட்சிகளின் பிரசார யுக்தியாக எதெல்லாம் இருந்தது? ஓர் பார்வை

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் பிரதானமாக களத்தில் இருக்கின்றன. இந்தக்கட்சிகள் தங்கள் பரப்புரையை எப்படி அமைத்திருந்தன என்று பார்க்கலாம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்pt web

களைகட்டிய பரப்புரை

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் சிறுசிறு கிராமங்களை மட்டுமே உள்ளடக்கிய தொகுதி. 75% திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தை மட்டுமே தங்கள் தொழிலாக வைத்துள்ளதால் இந்த தொகுதியில் பெரும்பாலான இடங்கள் கிராமப்புறங்களாகவே உள்ளன. ஈரோடு கிழக்கு போல மக்களை மொத்தமாக ஒரே இடத்தில் அழைத்து வந்து தங்க வைப்பது, மிக பெரிய விருந்துகள் வழங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என்றாலும் 15திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்து தொகுதியில் தங்கி ஒவ்வொரு வார்டாக வாக்காளர்களை சந்தித்து நேரடியாக பிரசாரம் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி புதிய தலைமுறை

பாமக-வை பொறுத்தவரை வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக பெரிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற பிரச்சாரத்தையே முன்னிலை படுத்தினர். அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் அந்த கட்சியில் உள்ள வன்னியர்கள் வாக்குகளை இந்த இட ஒதுக்கீடு கருத்துக்கள் மூலம் ஈர்க்கவும் பாமக முனைந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவம், சட்ட ஒழுங்கு பிரச்சினை என திமுக மீது கடும் விமர்சனங்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை மேடையில் வைப்பது உள்ளிட்ட வியூகங்கள் மூலம் வாக்காளர்களை வசப்படுத்த கடும் பிரசாரங்களை அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார். கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணாமலை, டி.டி.வி. தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாமகவுக்காக வாக்கு சேகரித்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
ஒரு போட்டி கூட விளையாடாத வீரர்களுக்கும் ரூ.5 கோடி| ரூ.125 கோடி பரிசுத் தொகை-யார், யாருக்கு எவ்வளவு?

குறிவைக்கப்படும் அதிமுக வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா திமுகவை கடுமையாக சாடினாலும் பாமகவை பெரிய அளவில் சீண்டவில்லை, அதிமுக மற்றும் வன்னியர்கள் வாக்குகளை ஈர்க்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்தும் பேசிய வாக்கு சேகரித்தார்.

தலைவர்கள்
தலைவர்கள்புதியதலைமுறை

பாமக, நாம் தமிழர் என இரண்டு கட்சிகளும் திமுக எதிர்ப்பு வாக்குகளை குறிவைத்தும், களத்தில் இல்லாத அதிமுகவின் வாக்குகளை பெறவும் பல முயற்சிகளை செய்தன. மறு முனையில் ஆளும் திமுக, தனது நலத்திட்டங்களை கூறியும், இனி செய்ய உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும் பேசியும் வாக்குகளை சேகரித்தது. மக்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரியவந்துவிடும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்
“ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்தது” - ஒப்புக்கொண்ட NTA.. கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com