“ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்தது” - ஒப்புக்கொண்ட NTA.. கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்!

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்ததாக நீதிபதி கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
நீட் விவகாரம், உச்சநீதிமன்றம்
நீட் விவகாரம், உச்சநீதிமன்றம்pt web

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில், தேசிய தேர்வு முகமை சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். மனுதாரர்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். ஒவ்வொருவரும் தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில், நீதிபதிகளும் கேள்விகளை எழுப்பினர்.

மனுதாரர்கள் சார்பில், "முழுமையாக இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த வாதத்தில், மே 5இல் நீட் தேர்வு நடந்த நிலையில் ஜூன் 14இல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டதற்கு 10 நாள் முன்பாக ஜூன் 4இல் நீட் தேர்வு முடிவு வெளியானது.

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாதபடி நீட் தேர்வில் இம்முறை முழு மதிப்பெண் பெற்றவர்கள் அதிகம். நீட் வினாத்தாள்கள் செல்போனில் கசிந்துள்ளன; பிரிண்டர்களில் அவை எடுத்து தரப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.

நீட் விவகாரம், உச்சநீதிமன்றம்
“காவல்துறை அதிகாரிகளை மாற்றிவிட்டால் சட்டம் ஒழுங்கு சீராகி விடாது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இந்த விவகாரத்தில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, 1563 மாணவர்கள் கருணை மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் எத்தனை பேர் நூறுசதவீதம் மதிப்பெண்களைப் பெற்றது, இதில் வினாத்தாள் கசிந்த தேர்வு மையங்களில் இருந்து யாராவது முழுமதிப்பெண் பெற்றுள்ளார்களா?

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேரில் எத்தனை பேர் தவறான வினாத்தாள் தரப்பட்ட மையங்களில் தேர்வெழுதினர்? வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பிவைக்கப்படுகிறது? போன்ற பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

Neet
Neet

மேலும், "நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று. சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது. வினாத்தாள் காட்டுத்தீ போல் பரவி இருக்கும்; 20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்தது இது. நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது? எப்போது அச்சிடப்படும்? மையங்களுக்கு அனுப்புவது எப்போது? வினாத்தாள் கசிவு, தேர்வு நடக்கும் நேரம் ஒத்துப் போகிறது என்றால் அது தீவிரமாக விசாரிக்கப்படும். நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்” என தெரிவித்தனர்.

நீட் விவகாரம், உச்சநீதிமன்றம்
மகாராஷ்டிரா | தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை... பாதிப்படைந்த இயல்பு வாழ்க்கை!

இதில் தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “ஒரு இடத்தில் நீட் வினாத்தாள் கசிந்தது. ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். 1,563 மாணவர்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களில் 6 பேர் தான் கருணை மதிப்பெண் பெற்றனர். தூதரகங்கள் வாயிலாக நீட் வினாத்தாள்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

நீட் விவகாரம், உச்சநீதிமன்றம்
திருப்பூர் | உயிரிழந்த மூதாட்டியை மயானம் வரை சுமந்து சென்ற திராவிட கழக பெண்கள்!

இந்த விவகாரம் தொடர்பாக கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து என்பது மிகவும் சரியானது. இன்றைய இணைய உலகில் சமூக ஊடகங்களில் ஒரு கருத்து என்பது சில நொடிகளில் பரவி விடுகிறது. அதைத்தான் அவர்களும் வலியுறுத்துகின்றனர்.

எதிர்காலத்தில் நம் மாணவர்கள் படித்தே மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், இவர்கள் படித்துதான் வந்தார்களா அல்லது முறைகேடுகள் செய்து வந்தார்களா என்ற கேள்விகளை எழுப்பும். இது அவர்களது உயர்கல்விக்கு தடையாக இருக்கும். எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை சிறப்பாக விசாரித்து நல்ல தீர்ப்பினை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

neet, NTA தவறான பெயரை உருவாக்கிவிட்டது, இரண்டையும் கலைத்துவிட வேண்டும். நிச்சயமாக உச்சநீதிமன்றம் இதை பன்முகப்பார்வையில் பார்த்து நல்ல தீர்ப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com