அமித்ஷா - தமிழக எம்.பிக்கள் சந்திப்பில் நடந்தது என்ன..?

வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், உரிய நிவாரண தொகை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக எம்.பிக்கள் சந்திப்பு
தமிழக எம்.பிக்கள் சந்திப்புபுதிய தலைமுறை

வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், உரிய நிவாரண தொகை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களும் 2 நாட்கள் விடாமல் பெய்த தொடர்மழையால் கடும் பாதிப்பை சந்தித்தன. இதற்கான நிவாரண நிதியை பெறுவதற்காக தமிழக எம்.பி.க்கள் குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்த நிலையில், அந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, " தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் தொடர்பான விரிவான அறிக்கை வழங்கப்பட்டது. மத்திய குழுக்களின் அறிக்கை கிடைத்த பிறகு நிவாரண நிதி விடுவிக்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேலும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை, தமிழகத்தின் சேத நிலையை உணர்ந்துள்ளது என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.” என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

தமிழக எம்.பிக்கள் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பின் போது, டி.ஆர். பாலு, ஜெயக்குமார், வைகோ, சு. வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com