மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியது என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி விளக்கம்

"ஜனவரி 27-ஆம் தேதிக்குள் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
TR Baalu
MP
TR Baalu MPpt desk

செய்தியாளர்: R.ராஜிவ்

தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தமிழகம் கோரியுள்ள 38,000 கோடி நிவாரண தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Amit shah
Amit shahpt desk

இதில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில் , ஜெயக்குமார் (காங்கிரஸ்) ,வைகோ (மதிமுக), சு.வெங்கடேசன் (சி.பி.ஐ), பி.ஆர்.நடராஜன் (சி.பி.எம்), ரவிகுமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லீம் லீக்), சின்ராஜ் (கொங்கு நாடு மக்கள் கட்சி) ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பாதிப்பு குறித்த தமிழக அரசின் கையேடும் அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக எம்.பி-க்கள் அமைச்சருடனான கலந்துரையாடல் குறித்து விளக்கினார். அப்போது பேசிய டி.ஆர்.பாலு கூறும்போது, “ கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். ஏற்கெனவே பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர், வெள்ளம் தொடர்பான அறிக்கையை வழங்கி நிதி கோரியுள்ளார்.

Flood
Floodpt desk

தமிழக வெள்ள பாதிப்பை மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய குழு ஆய்வு செய்துள்ளது. மாநில பேரிடர் நிதி அனைத்தும் பாதிப்பை சரி செய்ய செலவிடப்பட்டுவிட்டதால் தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதி வழங்கிட கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மத்திய குழுவின் ஆய்வு அறிக்கை 21-க்குள் கிடைத்துவிடும். பின்பு சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து முடிவு எடுத்து, வரும் 27-ஆம் தேதிக்குள் நிதியை விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று டிஆர்.பாலு தெரிவித்தார்.

அப்போது, தமிழக அரசு கோரியுள்ள முழு நிதியும் விடுவிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டு பின்பு தான் எவ்வளவு தொகை விடுவிக்கப்படும் என்பது தெரியவரும் என்றார்.

தொடர்ந்து மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிதி விடுவிப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதா? என்று கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக கூற முடியாது. கரிசனத்தோடுதான் மத்திய அரசு விவகாரத்தை பார்க்கிறது. மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து அமித் ஷாவும் நன்கு அறிந்துள்ளார். என்பதை பகிர்ந்து கொண்டார். எனவே 27-ஆம் தேதிக்குள் தமிழகத்திக்கு நிதி கிடைக்கும் என நம்புகிறோம். மத்திய அமைச்சருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு தென்னரசு உரிய பதிலளித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில், அரசியல் ரீதியாக கருத்து கூறவிரும்பவில்லை" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com