\
cm vijay
cm vijayx page

முதல்வர் விஜய்க்கு மிக முக்கியமான துறைகள்.. முதல்வர் விஜய் வசம் உள்ள துறைகள் என்ன?

முதல்வர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Published on
Summary

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பதவியேற்ற முதல்வர் விஜய் மற்றும் 10 அமைச்சர்களுக்கு, துறை ஒதுக்கீடு குறித்து வெளியான புதிய அறிவிப்பில், முக்கியமான காவல், உள்துறை, பொதுநிர்வாகம், சமூக நலன் சார்ந்த பல துறைகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், கடந்த 10ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதல்வர் விஜய் உட்பட 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிராமணம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இருப்பினும் அமைச்சர்களுக்கானஇலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தநிலையில், தற்போது அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CM Vijay
CM Vijay

அதன்படி, முதல்வர் விஜய்க்கு மிக முக்கியமானதுறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர், இளைஞர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகள் முதல்வர் விஜய்க்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. மேலும், நகராட்சிநிர்வாகம், குடிநீர் விநியோகம், சிறப்புத்திட்ட செயலாக்கம் ஆகிய துறைகளும்அவர் வசமே உள்ளன. படிப்படியாக அமைச்சரவை விரிவாக்கப்படும் என தவெக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

cm vijay
அமைச்சரவையில் அதிமுக? அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பதில்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com