விஜயகாந்த் படத்துடன் தண்ணீர் பந்தல்pt desk
தமிழ்நாடு
தவெக அலுவலகம் முன் விஜயகாந்த் படத்துடன் தண்ணீர் பந்தல் - ஆனந்த் விளக்கம்
சென்னை பனையூரில் உள்ள தவெக அவலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், எங்களது கட்சி அலுவலகம் அருகே பிறர் தண்ணீர் பந்தல் அமைத்தது பற்றி தெரியாது என்றார்.
தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் படத்துடன் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட நிலையில், ஆனந்த் இவ்வாறு கூறினார்.