\
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக உயர்வு
Published on: 

தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக அதிதீவிர மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 15,740 கன அடியில் இருந்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 114.46 அடியில் இருந்து, 116.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.64 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதே நிலை நீடித்தால், இன்னும் ஒருசில தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com