கேராளாவில் கிணற்று நீர் பயன்பாடால் கிருமித்தொற்றுai
தமிழ்நாடு
கேரளா | கிணற்று நீரால் மூளைக் கிருமித்தொற்று.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!
சுத்திகரிக்கப்படாத கிணற்று நீரால் மூளைக்கிருமித் தொற்று ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது..
Summary
கேரளாவில் மூளையைப் பாதிக்கும் அமீபா கிருமித் தொற்று அதிகரிப்பதற்கு குளோரின் கலக்காத கிணற்று நீர் பயன்பாடே முக்கிய காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வு எச்சரிக்கிறது.
கேரளாவில் மூளையைப் பாதிக்கும் ‘அமீபா’ கிருமித் தொற்று பரவுவதற்குக் குளோரின் கலக்காத கிணற்று நீரைப் பயன்படுத்துவதே முக்கியக் காரணம் என ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்துள்ளது. சுகாதாரமற்ற கிணற்று நீரைக்கொண்டு முகம், தலை கழுவுபவர்களுக்கும், நீர்நிலைகளில் குளிப்பவர்களுக்கும் இந்நோய் வர அதிக வாய்ப்புள்ளது.
சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும், கிணறுகளில் கிருமிநாசினி தெளித்துப் பராமரிப்பதும் இந்நோய் பரவாமலை தடுக்க உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

