தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்.. எங்கு குறைவு? - மொத்த நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் அமைதியாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம்
தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம் முகநூல்

தமிழ்நாட்டில் அமைதியாக நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிக்கு ஆர்வமுடன் வருகை தந்த பொதுமக்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தபோதும், அதற்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

அதன் பின்னர், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 72 .09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 67 .3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம்
ஒரே கட்சி.. இரண்டு நடிகைகள்.. குழப்பமான கருத்துக்கள்.. வைரலாகும் பதில்

எனினும், சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதே போன்று கோவை மக்களவை தொகுதியிலும் 8 சதவீதம் வரை வாக்குப்பதிவு உயர்ந்துள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வாக்குப்பெட்டிகள்!

நீலகிரி

நீலகிரி தொகுதி பவானிசாகரில் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவிபேட் ஆகியவை சீல் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, நீலகிரி அரசுக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம்
“ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை” - அண்ணாமலை குற்றச்சாட்டு

வால்பாறை

வால்பாறையில் உள்ள 68 வாக்கு மையங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.

சேலம்

சேலம் தொகுதிக்குட்ட ஓமலூரில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூரில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பப்பட்டது.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள 337 வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பெட்டிகள், விழுப்புரம் அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால் 29 வாக்குகளே பதிவாகின. சரியாக 6 மணிக்கு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம்
"ஏன் கட்சி துண்டோடு வர்றீங்க” - பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்.. புதுவையில் பரபரப்பு

மதுரை

மதுரை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தேனி

தேனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்றன.

திருச்சி

திருச்சி தொகுதிக்குட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் இருந்தும் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரிக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லபப்ட்டன.

திருவள்ளூர்

திருவள்ளூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புதுச்சேரி

புதுச்சேரியில் அரசியல் கட்சி முகவர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டன.

4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்ற 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

சேலம் செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களிக்க சென்ற 77 வயது மூதாட்டி சின்னபொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல்

சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப் போடச் சென்ற சூரமங்கலத்தை சேர்ந்த பழனிசாமியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் வாக்கு செலுத்த வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்த உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதம்
சேலம் நாடாளுமன்ற தொகுதி | வாக்களிக்க சென்ற இரு முதியவர்கள் உயிரிழப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை உயர்நிலைப் பள்ளியில் சாந்தி என்பவர் தனது வாக்கை செலுத்திவிட்டு வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக சாந்தியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com