"ஏன் கட்சி துண்டோடு வர்றீங்க” - பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல்.. புதுவையில் பரபரப்பு

வாக்குப்பதிவு நடக்கும் இடத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் கழுத்தில் கட்சி துண்டுடன் வந்துள்ளனர். இதைக்கண்ட பாஜகவினர் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரி பூத்
புதுச்சேரி பூத்புதியதலைமுறை

மக்களவை தேர்தல் அமைதியாக நடைப்பெற்றுவரும் நிலையில், புதுச்சேரியில் ஒரு பூத் ஒன்றில் காங்கிரஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி நகரப்பகுதியில் இருக்கும் ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசீலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுபதிவானது நடைப்பெற்று வந்தது.

ஒட்டுப்பதிவு நடக்கும் இடத்திற்கு வந்த காங்கிரஸ் தொண்டர்கள் கழுத்தில் கட்சி துண்டுடன் வந்துள்ளனர். இதைக்கண்ட பாஜகவினர் அவர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் பாஜக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலிசார் இருவர்களையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இப்பொழுது அப்பகுதியில் அமைதியாக ஓட்டு பதிவு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com