விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
firecracker factory explosion
firecracker factory explosionpt desk

செய்தியாளர்: நவநீதகணேஷ்

விருதுநகர் அருகே வசக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி பெற்ற தாளமுத்து பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பட்டாசுக்காண ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்த போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

 firecracker factory explosion
firecracker factory explosionpt desk

இதில் 3 அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின. இந்த விபத்தில் அறையில் பணியாற்றிய முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னிசேரி புதூரை சேர்ந்த காளிராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரவணக்குமார், சுந்தரமூர்த்தி ஆகிய இருவம் 90 சதவீதம் தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்படுள்ளனர்.

firecracker factory explosion
பல்வீர் சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட விவகாரம் - மனுதாரர் அச்சம்

தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com