பல்வீர் சிங் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட விவகாரம் - மனுதாரர் அச்சம்

விசாரணைக்கு அழைத்து வரப்படுவோரின் பற்களை பிடிங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பல்வீர் சிங் என்பவர்,  விசாரணைக்கு அழைத்துவரப்படுவோரின் பற்களை பிடிங்கியதாக கடந்த வருடம் மார்ச் மாதம் பலர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை வழக்கு நடைபெற்றது அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றப்பட்டது. இதுகுறித்து வீகே புரத்தை சேர்ந்த புகார்தாரரான வேதநாராயணன் நம்மிடையே பேசிய பொழுது, “இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவருக்கு சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என புரியவில்லை.

மீண்டும் அவர் பதவிக்கு வரும் நேரம் எங்களுக்கு மேலதிகாரிகளால் ஏதேனும் நடக்க வாய்ப்பு உள்ளது. தவறு செய்தவருக்கு தண்டனை என்பது இல்லையா? இதனால் எங்களுக்கு மீண்டும் பிரச்னை வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.கூறி உள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com