விருதுநகர் | ஆவியூர் கல் குவாரி வெடிவிபத்திற்காக காரணம் குறித்து எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்

ஆவியூர் கல் குவாரி வெடிவிபத்திற்காக காரணம் குறித்து எஃப் ஐ ஆரில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரஜன் வெடிமருந்து வேனையும் அருகருகே வைத்து இறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்து தொடர்பாக பதியப்பட்ட fir
கல்குவாரி விபத்து தொடர்பாக பதியப்பட்ட firpt web

விருதுநகர் மாவட்டம் ஆவியூரில், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வெடிவிபத்து ஏற்பட்டது. குவாரியில் வெடிபொருட்களை இருப்பு வைக்கும் குடோனுக்கு டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்கள் வேன் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த வெடிப்பொருட்களை குருசாமி, துரை மற்றும் கந்தசாமி ஆகியோர் கையாண்டு கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது பணியில் இருந்த மூன்று தொழிலாளர்களும் உடல் சிதறி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டனர். சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு வெடிச்சத்தம் உணரப்பட்டது.

வெடி விபத்தின் பொழுது குவாரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கோர காட்சிகள் காண்பவரை நடுங்க வைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, புவியியல் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை சார்ந்து அதிகாரிகள் வெடி விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

கல்குவாரி விபத்து தொடர்பாக பதியப்பட்ட fir
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு; மெளனம் களைத்த அமித்ஷா.. நன்றி தெரிவித்த சித்தராமையா.. பின்னணி என்ன?

இந்த தனியார் கல்குவாரியில் வெடி பொருட்களை இருப்பு வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. குவாரியில் வெடிபொருட்களை இருப்பு வைப்பதற்கு சென்னை கனிம வளத்துறையிடம் இருந்து சுமார் 1,500 கிலோ வரை வெடிபொருட்களை இருப்பு வைப்பதற்காக குவாரி நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக விருதுநகர் எஸ் பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.

முதற்கட்டமாக குவாரியின் உரிமையாளர்கள் ராஜ்குமார் மற்றும் சேதுராமன் ஆகியோர் மீது வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இதில் சேதுராமன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். கல்குவாரியில் சட்டத்துக்கு விரோதமாக விதிமீறல் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால் அடுத்தடுத்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்குவாரி விபத்து தொடர்பாக பதியப்பட்ட fir
சல்மான் கான் வீட்டருகே நடந்த துப்பாக்கிச்சூடு - வழக்கில் கைதானவர் விபரீத முடிவு

இந்நிலையில் ஆவியூர் கல் குவாரி வெடிவிபத்திற்காக காரணம் குறித்து எஃப் ஐ ஆரில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரஜன் வெடிமருந்து வேனையும் அருகருகே வைத்து இறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தபோதும், போதிய பாதுகாப்பு ஏதும் இல்லாமலும், உயர் ரக வெடிபொருட்களை இறக்குமதி செய்யும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர்கள் இல்லாமலும் இருந்துள்ளது. அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் மேற்படி வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமலும் வேலை செய்துள்ளனர். குடோனில் வேலை செய்த மூன்று நபர்கள் உயிரிழக்க இந்த அஜாக்கிரதையே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com