சல்மான் கான் வீட்டருகே நடந்த துப்பாக்கிச்சூடு - வழக்கில் கைதானவர் விபரீத முடிவு

நடிகர் சல்மான் கான் வீட்டருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய நபர் கைதாகியிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கிறார்.
சல்மான் கான்
சல்மான் கான் முகநூல்

கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டருகே அதிகாலை நேரத்தில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றது. இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் இத்தாக்குதலை நடத்தினர்.

சல்மான் கான்
சல்மான் வீட்டில் துப்பாக்கிச்சூடு; உண்மையை ஒப்புக்கொண்ட நிழல் உலக தாதா.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கியை தந்து உதவிய புகாரில் அனுஜ் தாப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இருந்தார். அதில் மும்பை காவல் ஆணையர் அலுவலக லாக்கப்பில் அவர் இருந்த போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சல்மான் கான்
“லோகேஷ் தொடர்ந்து இப்படித்தான் செய்கிறார்” - ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு செக் வைத்த இளையராஜா!

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com