சுடுமண் விளையாட்டுப் பொருள் கண்டெடுப்பு
சுடுமண் விளையாட்டுப் பொருள் கண்டெடுப்புpt desk

விருதுநகர் | வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டுப் பொருள் கண்டெடுப்பு

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் சிறுவர்கள் விளையாடும் சுடுமண் விளையாட்டுப் பொருள் தட்டு வடிவில் கண்டெடுகப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 20 குழிகளில் இருந்து உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,520-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்

இந்நிலையில் தற்போது தோண்டப்பட்ட குழியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிறுவர்கள் விளையாடும் சுடுமண் விளையாட்டுப் பொருள் தட்டு வடிவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுடுமண் விளையாட்டுப் பொருள் கண்டெடுப்பு
பெரம்பலூர்|1,2,3.. காதல் திருமணம் செய்துகொண்ட காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கணவரின் பகீர் பின்னணி

இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறியபோது... 3-ம் கட்ட அகழ்வாய்வில், சிறுவர்கள் விளையாடும் தட்டு வடிவிலான விளையாட்டுப் பொருள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com