காதல் திருமண ஜோடி
காதல் திருமண ஜோடிpt

பெரம்பலூர்|1,2,3.. காதல் திருமணம் செய்துகொண்ட காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கணவரின் பகீர் பின்னணி

பெரம்பலூர் அருகே ஏற்கனவே இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்ததை மறைத்து, மூன்றாவது காதல் திருமணம் செய்துகொண்ட கணவனை உண்மையை தெரிந்து கொண்ட காதல் மனைவி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு.
Published on

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் ரம்யா (22 வயது). இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கனாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகனான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ரம்யா குரும்பலூர் அரசு கலைகல்லூரியில் Bsc Micro Biology படித்துவரும் நிலையில், பெரம்பலூர்-கல்பாடி ரூட்டில் செல்லும் (MSM) தனியார் மினி பேருந்தில் கன்டெக்டராக பணியாற்றிவந்த தினேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி பின்பு அவரை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

கணவனை காவல்நிலையத்தில் சிக்கவைத்த மனைவி..

இந்நிலையில் தான் கணவர் தினேஷுக்கு ஏற்கனவே மேலப்புலியுர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்யா மற்றும் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த வள்ளி என இருபெண்களுடன் காதல் திருமணம் நடந்துள்ளது ரம்யாவிற்கு தெரியவந்தது.

கணவரை பற்றி அறிந்துகொண்ட ரம்யா, இன்று உறவினர்கள் துணையுடன் தினேஷ் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பாதிக்கப்பட்ட ரம்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் தரப்பில் அளித்த புகாரை ஏற்ற போலிஸார் தினேஷை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com