விருதுநகர் | தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா.. மாணவ மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்!
விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் ( ஏ.ஏ.ஏ.) பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா பாரம்பரிய உற்சாகத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் ( ஏ.ஏ.ஏ.) பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா பாரம்பரிய உற்சாகத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை தாங்கி விழாவைத் துவக்கி வைத்தார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
மாணவ மாணவிகளுக்காக கோலப்போட்டி, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்றான சிலம்பாட்டத்தை கல்லூரி மாணவ மாணவிகள் சிறப்பாக அரங்கேற்றி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் கிராமிய நடனங்களை ஆடி விழாவிற்கு மேலும் உற்சாகம் சேர்த்தனர். ஆசிரியர்களுக்கென கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

