திருப்பூர்: 5000 பெண்கள் கலந்து கொண்ட மெகா சமத்துவ பொங்கல் விழா..!
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கம. இந்நிலையில், இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 27 வது ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் அனைத்து மதத்தைச் சேர்ந்த 5000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். முன்னதாக முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மிப்பட்டுப் பாடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஊர் கூடி பொங்கல் வைக்கும் இந்த பொங்கல் திருநாள் நிகழ்வை காண திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.