தமிழ்நாடு
விருதுநகர்: அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
விருதுநகர்: அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இளைஞர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.
அருப்புக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலாஜி (24); லாரி ஓட்டுனரான இவர், இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு லாரியில் மணல் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதையில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்ததை அறியாத பாலாஜி; கீழே கிடந்த மின்வயரை தொட்டுள்ளார்.
இதில், மின்சாரம் தாக்கி பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல் துறையினர் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.