போதையில் மயக்கம் அடைந்த தந்தையை தட்டி எழுப்பிய குழந்தை.. நெஞ்சை உலுக்கும் காட்சி.. நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் பலர் உயிரிழந்த சூழலில் நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் போதையில் மயக்கம் அடைந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சிபுதிய தலைமுறை

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் பலர் உயிரிழந்த சூழலில் நீதிமன்ற வளாகம் அருகே ஒருவர் போதையில் மயக்கம் அடைந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம் எதிரே சின்னமணி என்பவர் மயக்க நிலையில் படுத்திருந்தார். அருகே அவரது 3 வயது பெண் குழந்தை, தனது தந்தையை தட்டி எழுப்பும் காட்சிகள் வேதனையை ஏற்படுத்தின.

கள்ளக்குறிச்சி
“திமுக MLA-க்கள் ஆதரவில்தான் கள்ளச்சாராய வியாபாரம் நடக்கிறதா?” - விளக்கும் கள்ளக்குறிச்சி சேர்மன்!

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சின்னமணியை எழுப்பி விசாரித்தபோது, விஷ சாராயத்தால் உறவினர்கள் இறந்துவிட்ட சோகத்தில் தாமும் விஷ சாராயம் அருந்தியதாக கூறினார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த காவலர்கள், சின்னமணியை மருத்துவமனையில் அனுமதித்தனர். போதை தெளிந்தபிறகு அவரிடம் மீண்டும் விசாரித்ததில், அவர் டாஸ்மாக் மதுவையே அருந்தியதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com