கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்
கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்pt desk

விழுப்புரம் | கோயில் குடமுழுக்கு விழாவில் சீரியல் லைட் போட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்

வளவனூர் அருகே ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக சீரியல் லைட் போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: காமராஜ்

விழுப்புரம் மாவட்டம் இராம்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராம பக்தர் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (26 ஆம் தேதி) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.. குடமுழக்கு விழாவினை முன்னிட்டு ராம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்த ஹரிதரன் என்ற கல்லூரி மாணவர் சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

Tragedy
Tragedypt desk

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு அருகிலுள்ள கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கல்லூரி மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்
மதுரை | ரீல்ஸ் மோகம் - ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட சிறுவர்கள்..!

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com