\
Villages Celebrating a Silent Diwali Without Firecrackers
Adari village PT web

தீபாவளி : பட்டாசே வெடிக்காத கிராமங்கள்.. காரணம் என்ன தெரியுமா?

இயற்கையின் சமநிலையை காக்கும் வௌவால்களை பாதுகாக்கும் மனிதநேயத்தின் சிறந்த உதாரணமாக இக்கிராமங்கள் திகழ்கின்றன.
Published on: 

தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியைத் தேடி பட்டாசு வெடிக்கும் திருநாளில், வாயில்லா ஜீவன்களுக்காக அமைதியைக் கடைப்பிடிக்கும் கிராமங்களின் உன்னத மனிதநேயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.. பட்டாசு வெடித்து, வண்ண வண்ண வாண வேடிக்கைகளுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாளாகவே தீபாவளி காலம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

Adari village
Adari villagePT web

ஆனால், இந்த ஆரவாரமான பண்டிகை நாளிலும் கூட, காதுகளைப் பிளக்கும் வெடி சத்தத்திற்குத் தடை விதித்து, முழுமையான அமைதியைக் கடைப்பிடித்து வரும் சில கிராமங்கள் நம் தமிழ்நாட்டில் உள்ளன. திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலை பகுதி மற்றும் கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அடரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியன்று வெடிகள் வெடிக்கப்படுவதில்லை. காரணம், அங்கு வாழும் வௌவால்கள். இந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள மரங்களிலும், பழைய பன்னெடுங்காலக் கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன

இயற்கையின் சிறந்த நண்பர்களாக விளங்கும் வௌவால்கள், மகரந்தச் சேர்க்கைக்கும் விதைப்பரவலுக்கும் மிகமுக்கியப் பங்காற்றி சுற்றுச்சூழல் சமநிலையைக் காக்க உதவுகின்றன. ஒலியின் அதிர்வுகளால் வௌவால்கள் மிகவும் அஞ்சி நடுங்கும் தன்மை கொண்டவை. திடீரென வெடிக்கப்படும் பட்டாசுகளின் பயங்கர சத்தத்தால் நிலைகுலைந்து போகும் வெளவால்கள், இறந்துபோகும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதை நன்கு உணர்ந்த அந்த ஊர் மக்கள், வௌவால்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தங்களது பாரம்பரிய மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தையே பெருந்தன்மையோடு தியாகம் செய்துள்ளனர். எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாங்க உத்தரவோ அல்லது சட்டத் தடைகளோ இல்லாமல், கிராம மக்கள் தாங்களாகவே மனமுவந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்

Villages Celebrating a Silent Diwali Without Firecrackers
புதுக்கோட்டையில் முதல்வர்.. ரூ.23 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் திறப்பு!