\
Vijay Distributes Rs 100 Crore Welfare Aid in Pudukkottai
விஜய்Pt web

புதுக்கோட்டையில் முதல்வர்.. ரூ.23 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் திறப்பு!

புதுக்கோட்டை சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு ரூ. 23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
Published on: 

தமிழக முதல்வர் விஜய் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார்.

இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி சென்ற முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அப்போது, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கு, பாரம்பரிய பயிர் வகைகள், நெல், முந்திரி மற்றும் தானிய வகைகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து, சுமார் 14,000 பயனாளர்களுக்கு ரூ.60 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

முன்னதாக, முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இரவோடு இரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vijay Distributes Rs 100 Crore Welfare Aid in Pudukkottai
சமஸ்கிருத மந்திரங்கள்.. திமுகவில் இருந்து எழுந்த எதிர்ப்பு : விவாதமான துரைமுருகன் இல்லத் திருமணம்!