Villagers
Villagerspt desk

திருப்பூர்: இரவு நேரத்தில் திடீர் திடீரென கூரை மீது விழும் கற்கள் - அச்சத்தில் கிராம மக்கள்

காங்கேயம் அருகே வீடுகளின் மீது மர்மமான முறையில் கல் விழுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
Published on

செய்தியாளர்: சுரேஷ் குமார்

காங்கேயம் படியூர் அருகே உள்ன கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டபாளையம் மதுரை வீரன் கோவில் அருகே உள்ள காலனியில் மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வீடுகளின் மீது மர்மமான முறையில் கல் விழுந்து ஓடுகள் உடைவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர் வரை இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை எனக்கூறுகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Stones
Stonespt desk

இது குறித்து காங்கேயம் காவல்துறையில் புகார் கொடுத்தும் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்த வேளையிலும் தொடர்ச்சியாக கற்கள் வந்து விழுவதாக சொல்லப்படுகிறது. கற்கள் விழும்போது, இதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரோந்து சென்று பார்த்துள்ளனர். அப்போதும் கற்கள் எங்கிருந்து வருகின்றது என்பதே தெரியவில்லையாம்.

Villagers
திண்டுக்கல்: கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

இதுகுறித்து காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பூர் காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com