திண்டுக்கல்: கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட 6 இளைஞர்கள் கைது

பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்டதாக 6 இளைஞர்களை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான கஞ்சா வியாபாரியை தேடி வருகின்றனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் இளைஞர்கள் சிலர், கஞ்சா புகைத்து போதையில் விழுந்து கிடப்பது போல வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலான நிலையில், பொதுமக்கள் பலரும் அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை அடுத்து இணையத்தில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

Arrested
Arrestedfile

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்ட நிலையில், கஞ்சா வியாபாரியையும் போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றினர். அவர்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

Accused
மாநகராட்சி கவுன்சிலர் டூ பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர்... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன், மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com