\
ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்
ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்pt desk

கள்ளக்குறிச்சி: டாஸ்மாக் திறக்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்

கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Published on

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுமங்கலம் கிராம மக்கள் மது வாங்க 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கணியாமூர், அடரி, சிறுபாக்கம், விருகாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று வருகின்றனர்.

Tasmac
Tasmacfile

இதனால் எதிர்பாராத விபத்துகளை சந்திக்க நேரிடுவதாகக் கூறி, சிறுமங்கலம் கிராமத்திலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மது குடிப்போர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்
தஞ்சாவூர்: செல்போனை பறித்தவரிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட நபர்! #ViralVideo

குறிப்பாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு மனு அளிக்க வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் டாஸ்மாக் வேண்டாம் என இதே கிராமப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள நிலையில், இப்போது டாஸ்மாக் வேண்டும் என சிலர் மனு கொடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com