ஆக்ரோசமாக சண்டை போட்ட நபர்
ஆக்ரோசமாக சண்டை போட்ட நபர்pt desk

தஞ்சாவூர்: செல்போனை பறித்தவரிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட நபர்! #ViralVideo

தஞ்சாவூரில் பட்டப் பகலில் இளைஞரிடம் செல்போனை வழிப்பறி செய்த நபர், பதறியடித்து ஓடிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: காதர்உசேன்

தஞ்சை கீழவாசல் படிமா சந்து பகுதியில் நேற்று மாலை ஒருவர் தன்னுடைய செல்போனை பார்த்தபடியே நடந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், அவரிடம் இருந்து செல்போனை பறித்து பணத்தை எடு எனக் கூறியுள்ளார்.

ஆனால், அந்நபர் துணிச்சலாக, “எதற்காக எனது செல்போனை பறித்தாய்?” என அதிலொரு இளைஞரின் டி-சர்ட்டை பிடித்து இழுத்து மல்லுக் கட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்ப்பட்டது.

ஆக்ரோசமாக சண்டை போட்ட நபர்
ஆக்ரோசமாக சண்டை போட்ட நபர்pt desk

இதில், செல்போனை பறித்த நபர், தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றிவிட்டு பதறியடித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

ஆக்ரோசமாக சண்டை போட்ட நபர்
வேலூர்: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம் - சிபிசிஐடி வழக்குப் பதிவு

பட்டப்பகலில் இரண்டு இளைஞர்கள் செல்போனை பறித்துச் செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com