ஆதரவு சீமான்.. ஆக்ரோஷ அன்புமணி.. அமைதி திமுக... - அதிமுக வாக்குகளை பெற முட்டி மோதும் கட்சிகள்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடாத நிலையில், அதிமுகவின் வாக்குகளை குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.
admk
admkpt web

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஏற்கெனவே, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை முன்வைத்த நிலையில், தற்போது அதிமுகவின் போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், சீமானின் இந்த ஆதரவு நிலைப்பாட்டுக்குப் பின்னால் உள்ள அரசியல் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்Twitter

விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததையொட்டி, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிகவும் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துவிட்டது. புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடவில்லை என அறிவித்திருக்கிறது. அதனால், திமுக, பாமக, நாதக இடையிலான மும்முனைப் போட்டியாக களம் மாறியிருக்கிறது.

admk
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை!

யார் வெற்றி பெறுவது என்பதில் மட்டுமல்ல, அதிமுக போட்டியிடாத நிலையில், அதன் வாக்குகளை யார் கைப்பற்றுவது என்பதிலும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது என்றே சொல்லலாம். காரணம், விக்கிரவாண்டி அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ள தொகுதி. இதுவரைக்கும் நான்கு முறை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை அதிமுக கூட்டணிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த தொகுதியில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் பெற்ற வாக்குகள் 65,365...ஏறக்குறைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய வாக்குகளாக அதிமுக வாக்குகள் மாறியிருக்கின்றன.

Anbumani
Anbumanipt desk

அதனால், இந்த வாக்குகளைப் பெற திமுக, பாமக, நாதக ஆகிய மூன்று கட்சிகளும் முட்டி மோதி வருகின்றன. இந்நிலையில், சீமான் நேரடியாகவே விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைகளில், அதிமுக, தேமுதிக தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறார்.

2009, 2011 உள்ளிட்ட தேர்தல்களில் எந்த பிரதிபலனும் பாராமல் உங்களுக்காக நான் வேலை செய்திருக்கிறேன். அதனால், இந்த முறை எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார். தற்போது, அதிமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இடைநீக்கம் செய்ததைக் கண்டித்திருப்பதோடு, அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார் சீமான்.

admk
"நிபந்தனையற்ற மன்னிப்பு கோராவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு.." - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

கூடுதலாக இராவணன், இடும்பவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கும் ராஜரத்தினம் மைதானத்துக்கு நேரில் சென்று தங்களது ஆதரவையும் தெரிவித்திருக்கின்றனர்...

மறுபுறம் திமுகவுக்கு எதிராக சமீப நாட்களாக பாமக தீவிர செயல்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. தவிர, எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே திமுகவை அழிக்கதான். உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி அதிமுக தொண்டர்களை நோக்கி கேள்விகளை எழுப்பி வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.

ஆனால், அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர்த்து விடுங்கள், பாமகவை மட்டும் விமர்சியுங்கள். இந்த நேரத்தில், அதிமுகவை விமர்சித்து அந்த வாக்குகளை இழக்க வேண்டாம் என திமுக தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Seeman
Seemanpt desk

அந்தவகையில், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான அதிமுக வாக்குகளைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டி திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே கடுமையான போட்டியாக மாறியிருக்கிறது என்பதே கள எதார்த்தம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com