"நிபந்தனையற்ற மன்னிப்பு கோராவிட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு.." - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ரூ.1 கோடி நஷ்ட ஈடு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரத்தில் அண்ணாமலையின் சதி உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். 3 நாட்களில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோராவிட்டால், ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com