vijays tvk party joined full details here
ஆனந்த், அருண்ராஜ்புதிய தலைமுறை

த.வெ.கவில் இணைந்த முக்கியப் புள்ளிகள்.. Ex IRS அதிகாரிக்கு முக்கியப் பொறுப்பு!

ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ், முன்னாள் நீதிபதி சுபாஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களான ராஜலட்சுமி, டேவிட் செல்வன், டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று த.வெ.கவில் இணைந்துள்ளனர்
Published on

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜயின் த.வெ.கவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரபலங்கள் சிலர் அக்கட்சியில் இன்று இணைவதாகத் தகவல் எழுந்தது.

vijays tvk party joined full details here
tvk partypt

அதன்படி, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ், முன்னாள் நீதிபதி சுபாஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களான ராஜலட்சுமி, டேவிட் செல்வன், டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று த.வெ.கவில் இணைந்துள்ளனர். இதில், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜுக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை தலைவர் என்.மரிய வில்சனும் த.வெ.கவில் இணைந்துள்ளார்.

vijays tvk party joined full details here
”நீட் மட்டும்தான் உலகமா?” - மாணவர்கள் விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com