விஜயின் பரப்புரை: நேரடி குறி அதிமுகவா? | அரசியல் Decode
திருச்சியில் முதல் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், திமுகவின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, அவர்கள் பாணியிலேயே, சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மரக்கடை பகுதியில் பேசிய விஜய், மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை எனவும், பெண்களுக்கு இலவச பேருந்தை விட்டு, ஓசி ஓசி என சொல்லிக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் விஜய் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை ரத்துசெய்வோம்... கல்விக் கடனை ரத்துசெய்வோம் என சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுகவின் பல்வேறு வாக்குறுதிகளை குறிப்பிட்டு விஜய் கேள்வி எழுப்பினார். நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே தாங்கள் செய்வோம் என வாக்குறுதி அளித்த விஜய், பெண்கள் பாதுகாப்பில் சமரசமே இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் புதிய தலைமுறை ஆசிரியர் நேரலையில் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதை காணொலியில் முழுமையாகக் காணலாம்.