விஜயகாந்த் இறுதி ஊர்வலம்
விஜயகாந்த் இறுதி ஊர்வலம்pt web

தொடங்கியது கேப்டன் பயணம்: மக்கள் கடலில் விஜயகாந்த் இறுதி பயணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிப் பயணம் தொடங்கியது
Published on

விஜயகாந்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. அவரது இறுதிப் பயணத்திற்கான வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் இருந்து அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. மன்றோ சிலையில் துவங்கி பல்லவன் சாலை வழியாக, சென்னை செண்ட்ரலுக்கு முன்பு, பூந்தமல்லி சாலை வழியாக கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி தாண்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறது.

காவல்துறையினர் கிட்டத்தட்ட 3,500 பேர் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தாண்டி சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகளும் தீவுத்திடலில் செய்யப்பட்டுள்ளது. 12 கிலோ மீட்டர் எடுத்துச் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் ஊர்வலம் செல்லும் பிரதான சாலையின் வழித்தடங்களை ஒருவழிப்பாதையாக மாற்ற காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அரசு மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து கட்சி அலுவகத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. தீவுத்திடலில் இருந்து கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவிற்கு இறுதி ஊர்வலம் பயணிக்க இருக்கிறது. தீர்மானிக்கப்பட்ட நேரத்தை விட கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தாண்டிதான் ஊர்வலம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com