தேமுதிக தொண்டர்கள், ரசிகர்களுக்கு GOOD NEWS.. வீடு திரும்பினார் விஜயகாந்த்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த்
விஜயகாந்த்file image

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மார்பு சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நலம் குறித்து வதந்திகள் அவ்வப்போது பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகவும், பிரேமலதாவும் அவ்வப்போது விளக்கமளித்து வந்தனர்.

சாமானியர்கள் தொடங்கி நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அவர் விரைந்து நலம்பெற வேண்டும் என வாழ்த்துகள் தெரிவித்தனர். குறிப்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்புப்பூஜைகள் நடந்தன. பலரும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

தொடர்ந்து, பூரண உடல்நலம் பெற்ற அவர் இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேமுதிகவும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு விஜயகாந்தின் உடல்நலம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது. இதனால், ரசிகர்கள், தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

NGMPC22 - 147

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com