\
Vijay to Address Madurantakam By-Election Campaign Rally
விஜய்Pt web

மதுராங்கத்தில் முதல்வர் விஜய்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.. வேல் பரிசளித்த அமைச்சர்!!

மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை கூட்டத்தில் முதல்வர் விஜய் சற்று நேரத்தில் உரையாற்றவிருக்கிறார்.
Published on: 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முடிவுகள் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. இந்தச்சூழலில் தான், இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருக்கிறது. அந்தவகையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை செய்கிறார்.

அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வந்த அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரப்புரை திடலுக்கு வருவதற்கு முன்னதாக, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே உள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பரப்புரைக்காக வந்த முதல்வருக்கு அமைச்சர் சரத் ‘வேல்’ பரிசளித்தார்.

இதைத் தொடர்ந்து, சாலை வலம் மேற்கொண்ட முதல்வர் விஜய் தற்போது பரப்புரை நடைபெறவுள்ள மதுராந்தம் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்துள்ளார். 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ள அந்த பரப்புரைக் கூட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் விஜய் உரையாற்றவுள்ளார். இந்தக்கூட்டத்தில், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன், மரிய வில்சன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Vijay to Address Madurantakam By-Election Campaign Rally
ஜெம் வீரமணி மீதான போக்ஸோ வழக்கு.. சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ.. சூடுபிடிக்கும் விசாரணை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com