“நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு..” - வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை!

அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய்
விஜய்pt web

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், சினிமாவிலிருந்து அவர் விலக முடிவு எடுத்திருப்பதாகவும் பேச்சுகள் எழுந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சமீபகாலமாக, நடிகர் விஜய்யும் பேசி வந்தார். இப்படியான சூழலில் பலரும் எதிர்பார்த்ததைப் போலவே புதியதாக அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு அவர் பெயர் வைத்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்முகநூல்

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிய, விண்ணப்பித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதையடுத்து, பல அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து தமிழக மக்கள் கழகம் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்பிற்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com