விஜய்யின் அடுத்த Move.. வழக்கறிஞர்கள் அணியுடனான சந்திப்பு தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 5 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி கூட்டம் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவார் என கூறப்படும் நிலையில் அவரது இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதியை தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி கேரள ரசிகர்களுடனான விஜய்யின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ரசிகர்களையும் நிர்வாகிகளையும் மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் விஜய் சந்தித்த நிலையில், அடுத்தபடியாக தற்போது அணி வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com