விஜய்
விஜய்Pt web

தவெக மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள்| வேலுநாச்சியார் படை முதல் அண்ணன் சீர் திட்டம் வரை.!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெண்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
Published on

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தினக் கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில், மகளிர் சம்பந்தத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

விஜய்
விஜய்Pt web

அதன்படி இன்று கலை நிகழ்ச்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தினவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களை மேடைகளில் தவெக தலைவர் விஜய் கௌரவித்தார். இதையடுத்து, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த அவர், அங்கு திரண்டிருந்த பெண்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுப் பேசிய அவர், “பெண்கள், குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனி இலாகா உருவாக்கப்படும். அது எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும். சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பை நோக்கி பயணிக்கும் நம் கனவு நனவாவது உறுதி என்பதே நமது முதல் தேர்தல் வாக்குறுதி.

விஜய்
”மிரட்டல் விடுகின்றனர்..” விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த மனைவி சங்கீதா!

இரண்டாவது, மதிப்பு மிகு மகளிர் திட்டம். திமுக அரசில் தற்போது, பெண்களுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில், மளிகை சாமான் கூட வாங்க முடியவில்லை. எனவே, 60 வயது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 கொடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

அடுத்ததாக, அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் உருவாக்கப்படும். இத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

அண்ணன் சீர் திட்டம் திட்டத்தின் மூலம் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், தரமான பட்டு சேலையும் தாய்வீட்டில் இருந்து அண்ணன் சீராக வழங்கப்படும்.

தவெக மகளிர் தின விழா
தவெக மகளிர் தின விழாPt web

மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய் அல்லது பாதுகாவலருக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் காமராஜர் கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

வெற்றிப் பயணத்திட்டத்தின் மூலம், அரசுப்போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்.

அடுத்ததாக, பெண்கள் பாதுகாப்புக்கு ராணி வேலுநாச்சியார் படை அமைக்கப்படும். இதில், சாதாரண உடையில் கேமராக்களுடன் பெண்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.

பெண்களுக்கான குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படும்.

பொதுபோக்குவரத்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக Smart Panic Buttons பொருத்தப்படும்.

ரேஷன் கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இலவச நாப்கின்கள் திட்டம் வழங்குவது உறுதி செய்யப்படும்.

சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்து MSME நிறுவனங்களாக மாறுவோருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும்.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் உருவாக்கப்பட்டு தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், பேபி கிட்டும் வழங்கப்படும்” உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

விஜய்
”விஜயின் இமேஜ்-ஐ கெடுக்க திமுக சதி செய்கிறது” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com