Vijay Resigns from Tiruchirappalli East Constituency
விஜய்X

திருச்சி கிழக்கு | எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜய்!

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக தனிப் பெரும்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார்.

விஜய்
விஜய் Pt web

முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூரில் 1,20365 வாக்குகளும் , திருச்சி கிழக்கில் 91381 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இந்த சூழலில், அவர் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலையில், இன்று (மே-10 ) திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து இந்தத் தொகுதியில் யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, 6 மாதத்திற்குள் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Vijay Resigns from Tiruchirappalli East Constituency
200 யூனிட் இலவச மின்சாரம்.. முதல் கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்து.. தமிழக அரசு விளக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com